அறிவித்தல்
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாண,
மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை 3-1(அ) தரத்துக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2023
கிழக்கு மாகாண, மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை 3-1(அ) தரத்துக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்காக தகைமைகளை பூர்த்தி செய்துள்ள கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 06.11.2023 ஆகும்.
அனைத்து விண்ணப்பதாரிகளும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னர் கீழ் குறிப்பிட்டுள்ள கிழக்கு மாகாண சபையின் இணையத் தளத்தில் மேலதிக தகவல்கள் மற்றும் தகைமைகளை பரீட்சீலித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு அமைய விண்ணப்பப் படிவங்களை தயாரித்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
முறையாக சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் எதுவித முன்னறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.
www.ep.gov.lk Exams & Results
ஆ. மன்சூர்,
செயலாளர் (பதில்),
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம்,
Paper Ad: Download
0 Comments